[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

டிவிலியர்ஸின் மோசமான சாதனை...219 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட தென்னாப்பிரிக்கா

spinners-hasan-restrict-sa-to-219

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. 

பர்மிங்ஹாம் நகரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சில் ரன் குவிக்கத் தடுமாறிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான டிவிலியர்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு கட்டத்தில் 118 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்க அணியை, டேவிட் மில்லர் தனியொருவனாக மீட்கப் போராடினார். இருப்பினும் எதிர்முனையில் அவருக்கு சரியான ஒத்துழைப்புக் கிடைக்காததால், 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணியால் 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மில்லர் 75 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளும், இமாத் வாசிம் மற்றும் ஜுனைத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.   

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close