[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

கட்டாயத்தில் பாக். கலக்கலில் தென்னாப்பிரிக்கா!

champions-2017-pakistan-south-africa

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்று பர்மிங்காமில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா, சாவா போட்டியாகும்.

பாகிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்க அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. அந்த அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் பலமாக இருக்கிறது.
ஒருநாள் போட்டி தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு சவாலானதாக இருக்கும். இருந்தாலும் 
இந்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா - சாவா? போட்டி என்பதால் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் வென்றால், அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். இதனால் அந்த அணியும் வெற்றிபெறும் வேகத்துடன் ஆடும் என்பதில் சந்தேகமில்லை. 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவும், பாகிஸ்தானும் இதுவரை 72 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க‌ அணி 47 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close