[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்கமருந்து உட்கொண்டது அம்பலம்

maria-sharapova-failed-drugs-test-at-australian-open

ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் டென்னிஸ் போட்டிகளில் விளையாட வரும் 12-ம் தேதி முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெலடோனியம் என்ற தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டது சோதனையில் நிரூபணமானதை அடுத்து இந்த தடையை சர்வதேச பெண்கள் டென்னிஸ் சங்கமான ஐடிஎஃப் விதித்துள்ளது.

இந்த மருந்தை கடந்த 10 ஆண்டுகளாக தான் எடுத்துக்கொண்டு வருவதாகவும் ஆனால் இது கடந்தாண்டு தடை செய்யப்பட்டது தனக்கு தெரியாது என்றும் ஷரபோவா தெரிவித்தார். எனினும் நடந்த தவறுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் காலணி தயாரிப்பில் உலகளவில் பிரபல நிறுவனமான நைக், ஷரபோவாவை தனது விளம்பர தூதர் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close