[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஐ.பி.எல்: மூன்றாவது முறையாக சாம்பியனான மும்பை அணி

third-time-champion

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

புனே அணிக்கு எதிரான மிகவும் விறுவிறுப்பு நிறைந்த இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானம்,10-ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி. டாஸில் வெற்றி பெற்ற மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் க்ருணல் பாண்ட்யா 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். புனே அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் உனட்கட், டேனியல் கிறிஸ்டியன், சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த சீசனில் இதற்கு முன் மும்பைக்கு எதிராக விளையாடிய ஆட்டங்களில் எல்லாம் வெற்றியைப் பெற்ற புனே 130 ரன்கள் இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை அணியின் அனுபவ பந்துவீச்சாளர்கள், லசித் மலிங்கா, மிட்செல் ஜான்சன், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு புனே அணியைத் தடுமாறச் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி மூன்று ரன்களில் ஆட்டமிழக்க ரஹானேயும், கேப்டன் ஸ்மித்தும் சீராக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். 38 பந்துகளில் 44ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரஹானே ஆட்டம் இழக்க, ஸ்மித்தோடு இணைந்தார் தோனி. ஆனால் 10 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தனி ஆளாகப் போராடிய கேப்டன் ஸ்மித்தின் ஆட்டம் புனே அணிக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் மிட்செல் ஜான்சனின் நேர்த்தியான பந்துவீச்சில் திவாரி மற்றும் 50 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆட்டத்தின் போக்கு மாறியது. கடைசி பந்தில் 4ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேனியல் கிறிஸ்டியனால் அந்தப் பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மூன்றாவது ரன்னிற்கு ஓடிய அவர் ரன் அவுட்டாக மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியது. மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற காரணமாக இருந்த மும்பை அணியின் க்ருணல் பாண்ட்யாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Ipl mumbai pune
Advertisement:
Advertisement:
[X] Close