[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி: இந்திய அணிக்கு தங்கம்

indian-men-won-in-world-archery

உலகக் கோப்பைக்கான வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் உலகக்கோப்பைக்கான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியாவும், கொலம்பியாவும் மோதியது. இதில் இந்திய அணியின் சார்பில், அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ ஸ்ரீதர், அமன்ஜித் சிங் ஆகியோர் களம் இறங்கினர். கொலம்பியாவின் சார்பில் ஆண்ட்ரஸ் கார்டோனா, ஜோஸ் கார்லஸ் ஓஸ்பினா மற்றும் டேனில் முனோஸ் ஆகியோர் விளையாடினர்.

தொடக்க ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 58-57 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் 226-221 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்திய இந்திய அணி வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.

முன்னதாக ஆட்டத்தின் அரையிறுதி போட்டியில் 232 - 230 என்ற கணக்கில் அமெரிக்காவை இந்திய அணி வென்றது.

முன்னதாக, கலப்பு ஜோடி பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஆகியோர் அமெரிக்காவுடனான இணை வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றுக்கு தகுதி பெற்றது.வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி அமெரிக்க ஜோடியுடன் இன்று மோதுகிறது.

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அதனு தாஸ், தீபிகா குமாரி ஆகியோர் ரஷ்ய அணியுடனான கால் இறுதிபோட்டியில் தோல்வியடைந்தனர்.

ஆடவர் கால் இறுதி போட்டியில் 0-3 என்ற கணக்கில் இந்திய அணி ஜப்பானிடம் தோல்வியை தழுவியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close