[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

champions-cup

மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

டாப் 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம்

பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,

நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அணித்தேர்வு இன்று நடந்தது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் விராத் கோலி தலைமையிலான 15

பேர் கொண்ட அணியை அறிவித்தனர். இதில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிவரும் சுரேஷ் ரெய்னா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்

இடம்பெறவில்லை.

அணி விவரம்: ரோகித் ஷர்மா, ஷிகர் தாவன், விராத் கோலி (கேப்டன்), கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, தோனி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா,

புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், பும்ரா, ரஹானே, அஸ்வின், முகமது ஷமி.

Advertisement:
Related Tags : Iccicc
Advertisement:
Advertisement:
[X] Close