[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: பிசிசிஐ உறுதி

india-vs-pakistan-bcci-chief-shashank-manohar-calls-up-shaharyar-khan-to-allay-security-fears

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷஷாங்க் மனோகர் உறுதி அளித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியார் கானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், வரும் 19ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் வீர்பத்ர சிங் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையில், தங்கள் அணி வீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சகாரியார் கான் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து ஷஷாங்க் மனோகர், சகாரியார் கானை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். ஒருவேளை தர்மசாலாவில் போட்டி நடைபெறவில்லை என்றால், வேறு எந்த இடத்திற்கு மாற்றுவது என்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close