[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

தோனிக்காக பைஜாமாவைக் கூட விற்பேன்: ஷாரூக்கான்

shah-rukh-khan-ready-to-sell-his-pyjama-to-make-dhoni-a-kolkata-team-player

ஐபிஎல் ஏலத்தில் தோனி வந்தால், எனது பைஜாமாவைக் கூட விற்று அவரை ஏலத்தில் எடுப்பேன் என்று நடிகர் ஷாரூக் கான் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. சூதாட்ட சர்ச்சை காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் தோனி, ரைசிங் புனே அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனுக்கான புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டு, ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டி தொடரில் மீண்டும் இடம் பெறுகிறது. இதனால் குஜராத், புனே அணிகள் அடுத்த சீசனில் நீடிக்குமா என்பது சந்தேகமே.

10 ஆண்டு ஒப்பந்தம் முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டு அனைத்து அணி வீரர்களும் ஏலத்துக்கு வருவார்கள். தோனியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே மீண்டும் வாங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அவரைக் கைப்பற்ற மற்ற அணிகளும் போட்டிப் போட வாய்ப்பிருக்கிறது.

இதுகுறித்து கொல்கத்தா அணி உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானிடம் கேட்ட போது, ‘தோனியை வாங்குவதற்காக எனது பைஜாமா உள்பட எதையும் விற்கத் தயார்’ என்று கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close