[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

சச்சினின் அசைக்க முடியாத 5 சாதனைகள்

5-massive-achievement-of-sachin

சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 44 வது பிறந்த நாள்.

கிரிக்கெட்டில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன் அவர் ஓய்வு பெற்று விட்டாலும் அவரது அற்புத சாதனைகள் எப்போதும் அவரைப்பேசிக்கொண்டிருக்கும். இந்தச் சாதனைகள் முறியடிக்க முடியாதவை என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். அதில் 5 சாதனைகள் மட்டும் இங்கே:

1. 15921 டெஸ்ட் ரன்கள்: சச்சினின் இந்த ரன்களை மற்ற வீரர்கள் தொடுவது கடினம் என்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 13,378, சமீபத்தில் ஓய்வு அறிவித்திருக்கிற பாகிஸ்தானின் யூனிஸ்கான் 10 ஆயிரம் ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

2. 18,426 ஒன் டே ரன்கள்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சச்சினின் இந்த இமாலய ரன்களை வேறு யாரும் எட்டுவது நினைத்துப் பார்க்க முடியாதது. 15,ஆயிரம் ரன்களையே யாரும் எட்டாத நிலையில் இந்த ரன்களை யார் எடுக்கப் போகிறார்கள்?

3. 200 டெஸ்ட் போட்டி: அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டியில் விளையாடியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சச்சின். அவர் ஆடிய டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 200.

4. 51 டெஸ்ட் செஞ்சுரி: டெஸ்ட் போட்டியில் 51 செஞ்சுரி அடித்தவர் நம்ம மாஸ்டர் பிளாஸ்டர்தான். இவருக்கு அடுத்த லிஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவின் காலிஸ் 45, யூனிஸ்கான் 34 டெஸ்ட் செஞ்சுரிகளை கைப்பற்றியிருக்கிறார்கள்.

5. 34 357 ரன்கள்: சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளையும் சேர்த்து சச்சின் எடுத்துள்ள ரன்கள் இவை. இதை இன்னொருவர் இனி எடுக்க முடியுமா என்பது சந்தேகமே.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close