[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

டாப் வீரர்கள் காயம்: களைகட்டுமா ஐபிஎல்?

top-players-injured-in-ipl-season

காயம் காரணமாக முன்னணி கிரிக்கெட் வீரர்கள் விளையாடாததால் இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி களைகட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது போட்டிகள் 5-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. மே 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன.

இந்த தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய எட்டு அணிகள் விளையாடுகின்றன. 5-ம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசரஸும், ராயல் சேலஞ்சர்ஸும் மோதுகின்றன.பல்வேறு அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்கள் காயமடைந்துள்ளதால் அந்தந்த அணியின் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

புனே அணிக்காக விளையாடி வந்த இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கடந்த முறை கேப்டனாக செயல்பட்ட முரளி விஜய், ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாட மாட்டாராம். பெங்களூரு அணிக்காக விளையாடும் கே.எல்.ராகுல், தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள, லண்டன் செல்வதால் அவரும் ஆடவில்லை. பெங்களூர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்சும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுகிறார் எனத் தகவல்.

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு விரலில் வலி, உமேஷ் யாதவ் முதுகு வலி என்பதால் இந்தாண்டு விளையாட வில்லை. டெல்லி அணிக்காக கடந்த ஆண்டு விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர்களான டுமினி, டி காக், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் மார்ஷ், ஸ்டார்க், இலங்கையை சேர்ந்த மேத்யூஸ், நியூஸிலாந்தின் மார்ட்டின் குப்தில் ஆகியோர் காயம் காரணமாக முதல் கட்ட போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

முன்னணி வீரர்கள் இல்லாத இந்த வருட ஐபிஎல் களைகட்டுமா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close