[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

சுரேஷ் ரெய்னா இல்லாத இந்திய அணியா?

tough-for-suresh-raina-to-return-to-indian-cricket-team

இந்திய கிரிக்கெட் வாரியம் புதிதாக அறிவித்துள்ள ஒப்பந்தப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இல்லாததால், அவர் அணியில் இனி இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

பேட்டிங் மற்றும் ஃபீல்டிங், பகுதி நேர ஸ்பின்னராகப் பயன்படுவது போன்றவற்றால் இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்திருந்தார் சுரேஷ் ரெய்னா. மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் 6வது அல்லது 7வது வீரராக களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல முறை இந்திய அணியை வெற்றியடைய வைத்தவர் இவர். மேலும், ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், நிரந்தர 3வது வீரராக இருந்தவர். சென்னை அணிக்கு பல போட்டிகளை வெல்ல காரணமாக இருந்த ரெய்னா, சென்னையின் செல்ல பிள்ளை. தற்போது அவர் கிரிக்கெட் விளையாடுவதை குறைத்துள்ளது, சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2015-ல் திருமணம் செய்து கொண்ட ரெய்னா, அதன் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கூறுகிறார் உத்தரப் பிரதேச அணியின் முன்னாள் ரஞ்சி கோப்பைக்கான பயிற்சியாளர் ஒருவர். உத்திரப் பிரதேச அணிக்காக, ரஞ்சி கோப்பையில் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தியோதர் கோப்பைக்கான அணிகளிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை. பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற கடுமையாக உழைத்து வருவதால், ரெய்னா இந்திய அணியில் இடம்பிடிப்பது மிக கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஐபிஎல் தொடரில், குஜராத் லயன்ஸ் கேப்டனாக இருக்கும் ரெய்னா போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close