[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

நியூசிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி

south-africa-thrill-victory

நியூசிலாந்து அணியுடனான விறுவிறுப்பு நிறைந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹேமில்டன் நகரில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 59 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்த டி வில்லியர்ஸ் 37 ரன்களுடனும், பெக்லுக்வாயோ 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக குயிண்டன் டி காக் 69 ரன்கள் எடுத்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close