[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஆறு பந்துகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய கிரிக்கெட் வீரர்

six-of-best-for-aussie-club-bowler-aled-carey

ஒரே ஒவரின் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய உள்ளூர் அணிகளுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்துவருகிறது. அதில், கோல்டன் பாயிண்ட் அணிக்காக விளையாடும் அலெட் கேரே எனும் 29 வயது வீரர், ஈஸ்ட் பலார்ட் அணிக்கெதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார். கேரேவின் சாதனையின் உதவியுடன் கோல்டன் பாயிண்ட் அணி எதிரணியை 40 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கியது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்த சாதனையை எந்தவொரு வீரரும் இதுவரை படைத்ததில்லை என்றே தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் யுவராஜ் சிங், ஒரே ஒவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசியிருப்பது நினைவுகூறத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close