[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர்: வலிமை மிக்க சீனாவை வென்றது இந்திய ஆடவர் அணி

indian-men-beat-china-in-badminton-asia-team-championships

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், வலிமை வாய்ந்த சீன அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றது.

ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் சீன அணியை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், பிரணாய் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஸ்ரீகாந்த், சீனாவின் HOWWEI TIAN-ஐ 21-11, 21-17 என்ற நேர்செட்களில் தோற்கடித்தார்.

அஜய்ஜெயராம், ZHEGMING WANG-ஐ 22-20, 15-21, 21-18 என்ற மூன்று செட்களில் போராடித் தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாய், சீன வீரர் YUGI SHI-ஐ 21-14, 21-10 என்ற நேர்செட்களில் எளிதில் வீழ்த்தினார். இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்தனர்.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறிவிட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close