[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

'தோனி என்றாலே கேப்டன்தான்'..நெகிழும் விராட் கோலி

you-think-of-ms-dhoni-and-the-first-word-that-comes-to-your-mind-is-captain-virat-kohli

தோனி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கேப்டன் என்ற சொல்தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி சமீபத்தில் விலகினார். இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்திய விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இங்கிலாந்து தொடரில் முதல்முறையாக விராட் கோலி தலைமையில் ஒரு வீரராக தோனி களமிறங்க இருக்கிறார்.

தோனி குறித்து மனம் திறந்துள்ள கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான காலத்தில் என்மீது முழுநம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர் தோனி. அதுமட்டுமல்ல பல்வேறு சூழ்நிலைகளில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய எனக்கு தோனியின் தயவாலேயே அணியில் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை ஊக்கப்படுத்தியது. தோனி என்ற பெயரைக் கேட்டாலே கேப்டன் என்பதுதான் நினைவுக்கு வரும். வேறு எந்த வடிவிலும் அவரைச் சிந்தித்துப் பார்க்க முடியாது. என்றுமே எனக்கு அவர்தான் கேப்டன் என்று நெகிழ்ந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி, தோனியின் தலைமையின் கீழ் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close