[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

விராட் கோலியும் சளைத்தவர் அல்ல: அஸ்வின்

virat-kohli-is-a-best-cricketer-ashvin

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது அவரின் தனிப்பட்ட விருப்பம். அந்த முடிவை நான் மதிக்கிறேன் அதே வேளையில் விராட் கோலியும் சளைத்தவர் அல்ல இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராகக் கருதப்படும் மகேந்திரசிங் தோனி, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தோனியின் இந்த முடிவு குறித்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமைச் செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி, ‘ஒவ்வொரு இந்திய ரசிகர் மற்றும் பிசிசிஐ சார்பாக இந்திய அணியின் கேப்டனாக தோனி ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ எனக் கூறினார்.

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற அஸ்வினுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய அஸ்வின், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகத் தேர்வானதை தான் பெருமையாய் கருதுவதாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் எந்த இலக்கையும் தாம் வைத்துக் கொள்வதில்லை என்றும், அணியின் வெற்றியே குறிக்கோள் எனக் கூறினார். மேலும், தோனி கேப்டன் பதவியில் விலகியது குறித்து கருத்து தெரிவித்த அவர், இது தோனியின் தனிப்பட்ட விருப்பம். அவர் வெற்றிக் கேப்டன் என்றும் கூறினார். அதேசமயம் விராட் கோலியும் சளைத்தவர் அல்ல என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close