[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

தந்தை போன்றவர் தோனி... முகமது சமி நெகிழ்ச்சி

dhoni-is-like-a-father-figure-to-me-mohammed-shami

தோனிக்கும் எனக்குமான உறவு ஒரு தந்தை மகன் போன்றது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி நெகிழ்ந்துள்ளார்.

இந்திய அணியில் தாம் இடம்பிடித்தது குறித்தும் முதல் நாள் தனக்கு நடந்த நிகழ்வுகளை பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சமி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய அணியில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் முதல் நாள் தங்கள் அணியினர் முன்பு உரை நிகழ்த்த வேண்டும். இது நீண்ட காலமாக இந்திய அணியில் பின்பற்றி வரும் பழக்கம். எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது எனவே அணியினர் முன்பு பேச கூச்சமாக இருந்தது. எனவே நான் எங்கிருந்து வருகிறேன் இனி என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்து என்னால கூற இயலாத நிலையில் இருந்த போது தோனி தான் எனக்கு ஆதரவாக இருந்தார். அன்று முதல் இன்று வரை எனக்கு ஒரு தந்தை போல் பல்வேறு விஷயங்களில் என்னை வழி நடத்துகிறார் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close