[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

ஆசிய சாம்பியன்ஷிப் பனிச்சறுக்குப் போட்டி தங்கம் வென்ற இந்திய வீரர்

shiva-keshavan-grabs-gold-at-asian-luge-championship

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய லஜ் சாம்பியன்ஷிப் பனிச்சறுக்குப் போட்டியில் இந்திய வீரர் சிவ கேசவன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஜப்பான் நாட்டில் உள்ள நகனோ நகரில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியில் இந்திய அணி சார்பாக 35 வயதான சிவ கேசவன் கலந்துகொண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட சிவ கேசவன் பந்தய இலக்கை ஒரு நிமிடம் 39 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக கடந்த வாரம் பயிற்சியின்போது சிவ கேசவன் காயம் அடைந்திருந்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது ‘கடந்த வாரம் பயிற்சியின்போது காயம் அடைந்ததாகவும் எனினும் மனந்தளராமல் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற சிவ கேசவன் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close