[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஐசிசியின் கனவு அணிக்கு கேப்டன் விராட் கோலி

captain-virat-kohli-is-icc-s-dream-team

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியர் ஒருவர் கூட இடம் பெறாத ஐசிசியின் கனவு அணியில் இந்த ஆண்டு 3 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 2016 ஆம் ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி.யின் கனவு அணிக்கு விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று இந்திய வீ‌ரர்கள் இடம் பெற்றுள்ளனர். டேவிட் வார்னர், மிச்செல் மார்ஷ், மிச்செல் ஸ்டார்க் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்களும், குயின்டன் டி காக், டி வில்லியர்ஸ், ரபாடா ஆகிய தென்னாப்ரிக்க வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணியில், இந்திய வீரர்களில் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அலெஸ்டர் குக், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பர்ஸ்டோவ் ஆகிய 4 இங்கிலாந்து வீரர்களும், டேவிட் வார்னர் உள்ளிட்ட 3 ஆஸ்திரேலிய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close