[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

2016-ன் சிறந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்

r-ashwin-wins-cricketer-of-the-year-award

2016-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது அ‌றிவிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் 2016-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின், இந்த ஆண்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், சிறந்த வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும் அவர் வென்றுள்ளார். இதேபோல், டெஸ்ட் போட்டிக்கான ஐ.சி.சி.யின் கனவு அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்த விருதினை பெறும் மூன்றாவது இந்தியர் என்ற சிறப்பை அஸ்வின் பெற்றுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close