[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

42 வருடங்களுக்குப் பின் அஸ்வின், ஜடேஜா செய்த சாதனை

after-42-years-top-two-spots-in-icc-test-rankings-occupied-by-indians-as-jadeja-climbs-to-2nd

இந்திய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை அஸ்வினும், இரண்டாவது இடத்தை ஜடேஜாவும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இரு இடங்களை இந்திய வீரர்கள் பிடிப்பது கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும். இடதுகை சுழற்பந்துவீச்சாளர் பிஷன்சிங் பேடி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பகவத் சந்திரசேகர் ஆகியோர் கடந்த 1974ம் ஆண்டில் இதே சாதனையைப் படைத்திருந்தனர். தற்போது அஸ்வினும், ஜடேஜாவும் அந்த சாதனையைப் படைத்துள்ளனர். சென்னை டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜடேஜா திகழ்ந்தார். இலங்கையின் ரங்கணா ஹெராத், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இந்த பட்டியலில் முறையே 3, 4 மற்றும் 5ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்துக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 2ஆவது இடம் பிடித்துள்ளார். 3ஆவது, 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களில் முறையே இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஹசிம் அம்லா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close