[X] Close
JUST IN

தெற்காசிய போட்டிகள் நிறைவு: 308 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

south-asian-games-2016-complete-medal-tally-of-8-saarc-countries

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணி தொடர்ந்து 12வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே இந்திய அணி பதக்க வேட்டையில் ஈடுபட்டது.‌ 12 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில்

188 தங்கம்‌, 90 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 308 பதக்கங்களுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது.

25 தங்கம், 63 வெள்ளி, 98 வெண்கலம் என 186 பதக்கங்களுடன் இலங்கை அணி இரண்டாவது இடம் பிடித்தது.

பாகிஸ்தான் அணி 12 தங்கம், 37 வெள்ளி, 57 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும், ஆப்கானிஸ்தான் அணி 7 தங்கம் உட்பட 35 பதக்கங்களுடன் நான்காவது இடத்தையும் பிடித்தன.

பங்களாதேஷ், நேபாள், மாலத்தீவு, பூட்டான் அணிகள் 5 முதல் 8 வரையிலான இடங்களைப் பிடித்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close