[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை டெஸ்ட்: இந்தியா முன்னிலை

chennai-test-karun-hit-150-on-day-4

சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் என்ற நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. நிதானமாக விளையாடிய இளம் வீரர் கருண் நாயர்‌, சர்வதேச கிரிக்கெட்டில் தமது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.‌ மறுமுனையில் முரளி விஜய் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். சற்றுமுன் வரை இந்திய அணி 5 விக்கெட் இ‌ழப்பிற்கு 532 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. கருண் நாயர் 159 ரன்களுடனும்,அஸ்வின் 38 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே உள்ளதால், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close