[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்
  • BREAKING-NEWS என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி; ‘ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பினார்
  • BREAKING-NEWS மாமல்லபுரத்தில் இந்திய கலாசார விழா நடத்துவதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்

சேப்பாக்கம் மைதானத்தில் சச்சின், தோனி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

sachin-and-dhoni-fan-not-allowein-chennai-cheupakkam

சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் மற்றும் தோனியின் தீவிர ரசிகர்களான சுதீர், ராம் பாபு ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதீர் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்து ரசித்து வருகிறார். மேலும் அவர் தனது உடலில் இந்திய தேசிய கொடியையும் சச்சினின் எண் ‘10’ என்பதையும் வர்ணம் பூசியபடி போட்டியைப் பார்த்து வருகிறார். இதற்கிடையே சச்சின் மற்றும் தோனியின் தீவிர ரசிகர்களான சுதீர், ராம் பாபு ஆகியோருக்கு இன்று போட்டியை காண அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அவர்கள் ‘சேப்பாக்கம் மைதானத்திற்குள் செல்ல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் உடலில் வர்ணம் பூசியிருந்த காரணத்தால் அனுமதி வழங்கமுடியாது’ என்று அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களிடம் போட்டிக்கான டிக்கெட்டுகள் இருந்தும் காண முடியாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close