[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சென்னையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்... ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்

india-vs-england-test-match

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்‌தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

அலஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது..4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் நேற்று முன்தினமே சென்னை வந்துவிட்டனர்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு - பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது. தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இந்திய வீரர்களும், ஆறுதல் வெற்றிக்கான முனைப்பில் இங்கிலாந்து அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டியை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close