[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்... கேரளா பிளாஸ்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

kerala-blasters-enters-to-finals

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பெனால்டி ஷுட் வரை நீடித்த அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் டெல்லி அணியை கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வீழ்த்தியது.

டெல்லியில் 24 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்தப்போட்டி நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்டநேரத்தின் முடிவில் டெல்லி அணி இரண்டு கோல்களும், கேரளா அணி ஒரு கோலும் அடித்திருந்தன. டெல்லி அணிக்காக மார்செலோ பெரைரா, ரூபன் ரோச்சா ஆகியோர் கோல் அடித்தனர்.முதல் லெக் ஆட்டத்தில் கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்ததால் , கோல் விகித அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையை எட்டின. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், கேரளா அணி முதல் நான்கு வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கியது. டெல்லி அணி முதல் மூன்று வாய்ப்புகளையும் வீணடிக்க கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Delhi football keralablasters
Advertisement:
Advertisement:
[X] Close