இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி சேப்பாக்கத்தில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
வர்தா புயலால்,சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் இருந்த பெரிய திரை மற்றும் உயர்மின் கோபுரத்தின் விளக்குகள் சேதமடைந்து விட்டதாகவும், போட்டிக்கு முன்னதாக அவை சரிசெய்யப்படும் எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளர். இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, நாளை மறுதினம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக, இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்தடைந்தனர்.