[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

உலக சீரிஸ் பேட்மிண்டன் போட்டி... சிந்து முதன்முறையாக பங்கேற்பு

badminton-super-series-2016-women-s

சர்வ‌தேச தரநிலையில் முன்னணியில் உள்ள எட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் உலக சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நாளை தொடங்குகிறது.

துபாயில் நாளை தொடங்கும் உலக சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதன்முறையாக கலந்து கொள்கிறார். சர்வதேச தரநிலையில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், ஆறாம் நிலை வீராங்கனையான சீனாவின் சன் யூ, ஜப்பான் வீராங்கனை யமாகுச்சி ஆகியோர் அடங்கிய “பி” பிரிவில் சிந்து இடம்பெற்றுள்ளார். முதல் ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமாக்குச்சியை எதிர்த்து சிந்து விளையாடவுள்ளார். சர்வதேச தரநிலையில் எட்டாவது இடத்தில் உள்ள யமாகுச்சியுடன் இதுவரை மோதியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் சிந்து வெற்றி பெற்றுள்ளார். தரநிலையில் முதலிடத்தில் உள்ள தைவான் வீராங்கனை தை சூ யிங், தென்கொரிய வீராங்கனை சுங் ஜி ஹ்யுன், உள்ளிட்டோர் “ஏ” பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close