[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

டெஸ்ட் தரநிலையில் அஸ்வின், கோலி முன்னேற்றம்

ashwin-koli-top-in-icc-rankings

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் அஸ்வின், விராட்கோலி டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் முன்னிலையில் இருக்கின்றனர்.

அலஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. அடுத்து நடைபெற்ற 3 டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசைப்பட்டியலில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். மும்பை வான்கேடே மைதானத்தில் 4 வது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் விளாசிய கேப்டன் விராட்கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சென்னையில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தரநிலையில் மேலும் முன்னேற வாய்ப்புள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close