[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட்....இரண்டாம் நாள் முடிவு

india-vs-england-4th-test-day-2

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 2-ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி இந்திய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி கீட்டன் ஜென்னிங்ஸ் அதிக பட்சமாக 112 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் களமிறங்கினர். லோகேஷ் ராகுல் 24 ரன்களில் மொயின் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் முரளி விஜயுடன் ஜோடி சேர்ந்து புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இறுதியில் 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 70 ரன்களுடனும் பூஜார 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 254 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close