[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்..!

r-ashwin-equals-kapil-dev-s-record

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் அதிகமுறை 5 விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற கபில்தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 2-ஆவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி இன்று தொடர்கிறது. இப்போட்டியில் பென் ஸ்டோக்-கை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் கபில்தேவ் சாதனையை சமன் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 23 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ரவிச்சந்திர அஸ்வின் இந்த சாதனையை படைத்தார்.

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 35 முறை கும்ப்ளேவும், ஹர்பஜன் சிங் 25 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close