[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடங்கியது

hockey-junior-cup

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டி கோலாகலமாக தொடங்கியது

உலகம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் கலந்து கொள்ளும் இந்த ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ‘டி பிரிவில்’ இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இந்திய அணி இன்று மாலை 7 மணிக்கு நடக்கவிருக்கும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி கடைசியாக 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் கேப்டன் ஹர்ஜீத் சிங் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இதுவரை நடந்துள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் அதிகபடியாக ஜெர்மன் அணி 6 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்திவருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close