[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

இங்கிலாந்துடன் 4-ஆவது டெஸ்ட்... தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா.. !

england-india-4th-test-match

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியை டிரா செய்தாலே, இந்திய அணி தொடரை வென்றுவிடும். ஆனால், இந்த போட்டியில் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்ற நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சரிவில் இருந்து மீண்டு, இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுப்போம் என இங்கிலாந்து அணியின் புதுமுக வீரர் ஜென்னிங்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், இரண்டு வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரகானேவுக்குப் பதிலாக மனிஷ் பாண்டேவும், பந்து வீச்சாளர் முகம்மது சமிக்குப் பதிலாக ஷர்துல்தாக்கூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close