[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் பி.வி.சிந்து முன்னேற்றம்.

p-v-sindhu-raises-to-7th-palace-in-batminton-ranking

உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பி.வி. சிந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்‌.

சீன ஓபன் பட்டத்தை வென்ற சிந்து அதையடுத்து ஹாங்காங்கில் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியிலும் இறுதி சுற்று வரை முன்னேறினார். இந்நிலையில் உலக பேட்மிண்டன் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தரவரிசைப் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த பி.வி. சிந்து, சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி வருவதால் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதமூலம் உலகத் தரவரிசை பட்டியலில் முதன்முதலாக 7-வது இடம் பிடித்துள்ளார். மேலும் துபாயில் இம்மாதம் நடைபெறவுள்ள வோர்ல்ட் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 10-வது இடத்திலும், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 13-வது இடத்திலும், அஜய் ஜெயராம் 19-வது இடத்திலும் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close