சென்னையில் நடக்கவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் டிசம்பர் 16 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை 8.30 மணியளவில் தொடங்கியது. டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவும் கவுண்டர்களிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் பெற விரும்புபவர்கள் www.bookmyshow.com என்ற இணையத்தளத்தின் மூலம் டிக்கெட் பெறலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. ரூ.300, 500, 3000, 4000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஆன்லைன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டாத நிலையில் சென்னையில் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு
ரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்
எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி