[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: மும்முறை சாம்பியனான சிந்து விலகல்

pv-sindhu-pulls-out-in-macau-open

முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது, இந்தப்போட்டியில் இருந்து விலகுவதாக இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து அறிவித்துள்ளார்.

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மும்முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிந்து கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அடுத்து நடைபெறும் துபய் சூப்பர் சீரிஸ் போட்டியில் கவனம் செலுத்த விரும்புவதால், மக்காவ் ஓபனில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் சாய்னா நேவால் மட்டும் பங்கேற்கிறார். சாய்னா நேவால் முதல் சுற்று ஆட்டத்தில், இந்தோனேஷியாவின் ஹன்னா ரமதானியை எதிர்கொள்கிறார். ஆடவர் பிரிவில் கஷ்யப், சமீர் வர்மா, பிரணாய், ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சமீர் வர்மா முதல் சுற்றில் செக்குடியரசின் மார்டின் லுடிக்யை எதிர்த்து விளையாடுகிறார். பிரணாய் தைவான் வீரர் ச்சுன் வை சென்-னை எதிர்கொள்கிறார்.சாய் ப்ரீனித் முதல் சுற்றில் மக்காவ் வீரர் லாம் ஹோ ஹிம்மை எதிர்கொள்கிறார். ஸ்ரீகாந்த் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close