[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

மொஹாலி டெஸ்ட்...வலுவானநிலையில் இந்திய அணி

india-vs-england-3rd-test-day-3-stumps

இந்திய அணிக்கெதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளது.

மொஹாலியில் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 283 ரன்களில் ஆட்டமிழந்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது 417 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. கேப்டன் குக் 12 ரன்களுடனும், மொயின் அலி 5 ரன்களிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 36 ரன்களுடனும், கேரத் பட்டி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் விழ்த்தினர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டவே 56 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close