[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

மொஹாலி டெஸ்ட.. முதல் இன்னிங்சில் இந்திய அணி 417 ரன்கள் குவிப்பு

endvs-ind-3rd-test-india-417-run-for-1st-innings

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி, தனது முதல் இன்னிங்சில் 417 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

மொஹாலியில் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 283 ரன்களில் ஆட்டமிழந்தது. 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி, மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. அணியை சரிவில் இருந்து மீட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை நெருங்கிய ரவீந்திர ஜடேஜா 90 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இளம் வீரர் ஜெயந்த யாதவ், தமது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில் இந்திய அணி 417 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement:
Related Tags : Cricket match indvseng test
Advertisement:
Advertisement:
[X] Close