[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

டேவிஸ் கோப்பை டென்னிஸ்... முதல்முறையாக பட்டம் வென்றது அர்ஜென்டினா

davis-cup-tennis-argentina-champion

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் குரேஷியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அணி முதல்முறையாக பட்டத்தை கைப்பற்றியது.

டேவிஸ் கோப்பையின் இறுதி போட்டியில் ஏற்கனவே ஒருமுறை பட்டத்தை வென்றுள்ள குரேஷிய அணியை 4 முறை தோல்வி கண்டுள்ள அர்ஜென்டினா அணி எதிர்கொண்டது. கோப்பையைத் தீர்மானிக்கும் 5 போட்டிகளில் முதல் போட்டியில் குரேஷிய அணியும் இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினா அணியும் வெற்றி பெற்றன. அடுத்து நடந்த இரட்டையர் போட்டியில் குரேஷியா வெற்றியை வசமாக்கியது.

இதையடுத்து நேற்றிரவு நடந்த போட்டியில் குரேஷியாவின் மரின் சிலிச்சை அர்ஜென்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ எதிர்கொண்டார். இதில் மரின் சிலிச் முதலிரண்டு செட்டுகளை கைபற்றியநிலையில் குரேஷியாவுக்கு பட்டம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போது கடுமையாக போராடிய ஜுவான் மார்டின் மூன்றாவது செட்டை 7 -5 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி கைப்பற்றினார். அதற்கடுத்த இரண்டு செட்டுகளையும் அவர் சுலபமாக கைபற்றினார்.

இதனால் கடைசிப் போட்டியை வெல்லும் அணிக்கே கோப்பை என்ற நிலை ஏற்பட்டது. அந்த போட்டியில் அர்ஜென்டினாவின் ஃபெரெட்ரிகோ டெல்போனிஸ் குரேஷியாவின் இவோ கார்லோவிக்கை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் ஃபெடரெட்ரிகோ டெல்போனிஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அர்ஜென்டினாவிற்கு முதல் டேவிஸ் கோப்பையை பெற்றுத் தந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close