[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மொஹாலி டெஸ்ட்: சரிவிலிருந்து மீட்ட அஸ்வின் - ஜடேஜா ஜோடி

india-vs-england-test

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது.

மொஹாலியில் நடைபெறும் போட்டியில் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 283 ரன்களில் முடிவுக்கு வந்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களான விஜய் 12 ரன்களிலும், பார்த்தீவ் படேல் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா 51 ரன்களும், கேப்டன் விராட் கோலி 62 ரன்களும் சேர்த்தனர். 204 ரன்களுக்குள் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அஸ்வினும், ஜடேஜாவும் சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்து சரிவை தடுத்தனர். அஸ்வின் 57 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close