[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சாய்னாவின் சறுக்கலை சாதகமாக்கிய பி.வி.சிந்து.. !

pv-sindhu-overtakes-saina-nehwal-in-bwf-rankings

பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நேவாலை பின்னுக்கு தள்ளி பி.வி.சிந்து இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் வெண்கலம் பதக்கம் வென்றவர் சாய்னா நேவால். எனவே 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் அவர் பதக்கம் வெல்வார் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் ரசிகர்களின் ஆசையை பொய்யாக்கி அவர் பதக்கம் வெல்லாமல் தோல்வியை தழுவினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பி.வி. சிந்து வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் முழங்கால் காயம் காரணமாக கடந்த 3 மாதமாக எந்தவித போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த சாய்னா நேவால், சீன ஓபன் போட்டியில் பங்கேற்றார். ஆனாலும் முதல் சுற்றிலே வெளியேறினார். இதைத்தொடர்ந்து தற்போது சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலிலும் அவர் இறங்கு முகத்தை சந்தித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே தரிவசையில் 10 இடங்களுக்குள்ளாக இருந்த சாய்னா தற்போது 11-ஆவது இடத்திற்கு சென்றுள்ளார்.

அதேசமயம் பி.வி.சிந்து இரண்டு இடங்கள் முன்னேறி 9-ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதன் காரணமாக இந்திய அளவில் பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்து பி.வி.சிந்துவிடம் தற்போது சென்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close