[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை
  • BREAKING-NEWS உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

india-vs-england-2nd-test-india-won-the-match

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்யிதியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி ‌455 ரன்களும், இங்கிலாந்து அணி 255 ரன்களும் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 204 ரன்களில் ஆட்டமிழந்தது. 405 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் என்ற நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை இன்று தொடங்கியது. நான்காவது வீரராகக் களமிறங்கிய டக்கெட், ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே, விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த மொயின் அலி, 2 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.‌ நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில் இங்கிலாந்து அணி 158 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 246 ரன்கள்‌ வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி‌, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு - பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, மொகாலியில் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close