[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

ரூபாய் நோட்டு தடை எதிரொலி: இந்தியா-இங்கி. போட்டிக்கு இலவச அனுமதி

demonetisation-effect-andhra-cricket-association-announce-free-entry-for-day-1-of-vizag-test

ரூபாய் நோட்டுகள் தடை அறிவிப்பு எதிரொலியால் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க ஆந்திர கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் நிலையில், போட்டி முழுமைக்கும் இலவச அனுமதி அளிக்க இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்க செயலாளரான கங்காராஜு தெரிவித்துள்ளார். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் டிக்கெட் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், ஆந்திர கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவால் ரசிகர்கள் வருகை அதிகரிக்கும் என்று கங்காராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினம் மைதானத்துக்கு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான அந்தஸ்து கிடைத்த பிறகு நடக்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close