[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மருத்துவமனை படுக்கையில் ரோகித் ஷர்மா

rohit-sharma-undergoes-thigh-surgery-in-london-long-road-to-recovery-begins

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா அறுவை சிகிச்சைக்கு பின், தான் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுக்கு வலது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவிக்கையில், ரோகித் ஷர்மா தொடைப்பகுதி காயம் காரணமாக லண்டன் சென்று மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகவும், அவருக்கு அறுவை சிசிக்சை மேற்கொள்ளப்படலாம் எனவும் இதனால் அவர் குறைந்தது 3 மாத காலம் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையில் பேரில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் ரோகித் ஷர்மாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவமனை படுக்கையில் உள்ள தனது போட்டோவை ரோகித் ஷர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளர். அதில் எல்லாம் சிறப்பாக நடந்தது என்றும், உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திரும்பி வர இன்னும் காத்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 10 முதல் 12 வார காலம் ரோகிஷ் சர்மா ஓய்வில் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து ரோகிஷ் ஷர்மா ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close