[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அபார வெற்றி

south-africa-beating-australia-in-test-cricket

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்ரிக்க அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்ஆப்ரிக்கா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்ரிக்க அணி 242 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 244 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய தென்னாப்ரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 540 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா அணி 539 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் ஆடியது. தென்ஆப்ரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்கமுடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. சதத்தை நெருங்கிய உஸ்மான் கவாஜா , 97 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் பீட்டர் நெவில் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்களை பறிகொடுத்தனர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 361 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் 2 விக்கெட்களை வீழ்த்திய தென்னாப்ரிக்க வீரர் ரபாடா, இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்களைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close