[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மறுபிறவி எடுத்த விளையாட்டு பயணம்.. சாய்னா நேவால் உருக்கம்

saina-nehwal-is-on-a-comeback-trail-after-undergoing-a-knee-surgery

ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டது மறுபிறவி எடுத்தது போன்றது என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

சாய்னா நேவாலின் ரியோ ஒலிம்பிக் பதக்கக் கனவு வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தகர்ந்தது. காலில் ஏற்பட்ட காயத்தை அறுவை சிகிச்சை மூலம் கடந்து, சீன சூப்பர் சீரிஸ் போட்டியில் களம் இறங்க சாய்னா தற்போது தயாராகி வருகிறார். வருகிற 15-ம் தேதி தொடங்கும் சீன சூப்பர் சீரிஸ் போட்டியில் களம் இறங்க பெங்களூருவில் தீவிர பயிற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து சாய்னா கூறுகையில், முழங்கால் ஏற்பட்ட காயம் என்னுடைய விளையாட்டு பயணத்துக்கு முடிவு கட்டிவிட்டதாக பலர் எண்ணினர்.இதனால் நமது வாழ்வில் பேட்மிண்டன் விளையாட்டை மறக்கவேண்டி வருமோ என்ற நெருடல் எனது மனதிலும் இருந்தது. ஆனால், அந்த சவாலான சூழ்நிலையில் இருந்து மீண்டு, தனது பயணத்தைத் தொடங்கிவிட்டதாக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த போட்டி ஒன்றை மட்டுமே மனதில் வைத்து பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் சாய்னா கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close