[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அலுத்துவிட்டது..ஷேன் வார்னே கவலை

test-cricket-is-becoming-boring-for-the-fans-shane-warne

டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அலுத்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷேன் வார்னே, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்த கேப்டன்கள் ஆக்ரோஷமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஆடுகளங்கள் மற்றும் வீரர்களது ஆட்டத் திறன் போன்றவற்றை மாற்றத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் வார்னே ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் உள்ள 3 விதமான ஆட்டங்களில் கடினமானதும், பாரம்பரியமானதுமாகக் கருதப்படுவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள். டி20 போட்டிகளின் அறிமுகத்துக்குப் பின் மக்களிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் மக்களின் பார்வையைத் திருப்ப பகலிரவு டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் எடுத்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close