[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

பாகிஸ்தானை வீழ்த்தி வாகை சூடிய இந்திய அணி

india-win-2016-men-s-hockey-asian-champions-trophy

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மலேசியாவில் நடந்த இறுதிப் போட்டியின் முதல் பாதியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணிக்காக கேப்டன் ருபீந்தர் பால் சிங் மற்றும் அஃபான் யூசுப் ஆகியோர் கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணிக்காக அலீம் பிலால் கோலடித்தார்.

இரண்டாவது பாதியில் சூடிபிடித்த ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் பாகிஸ்தானின் அலிஷான் கோலடித்து போட்டியை சமனுக்குக் கொண்டுவந்தார். இதையடுத்து போட்டியின் மூன்றாவது கால்பகுதியில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி, பாகிஸ்தானின் கோல் முயற்சிகளைத் தடுத்தது.

போட்டியின் 51ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை நிகின் திம்மையா அடிக்க, பாகிஸ்தானை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதன்மூலம் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 2ஆவது முறையாக வெற்றி வாகை சூடியது. இந்த தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி ஏற்கனவே வீழ்த்தியிருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close