[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

அறிமுக போட்டியில் அசத்திய பாண்ட்யா...190 ரன்களுக்கு சுருண்டது நியூசி.

latham-southee-take-nz-to-190

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த போட்டியில் அறிமுக வீரராக இந்தியா தரப்பில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அசத்தல் பந்துவீச்சில் சிக்கி நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்கவீரர் லாதம் அரைசதம் அடித்தார். 9ஆவது விக்கெட்டுக்கு அவருடன் கைகோர்த்த டிம் சவுத்தியும் அரைசதம் அடிக்க நியூசிலாந்து அணி 43.5 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் லாதம் 79 ரன்களும், டிம் சவுத்தி 55 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கேதர் ஜாதவ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close