[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

raging-djokovic-sent-crashing-by-bautista-at-shanghai-masters

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ராபெர்டோ படிஸ்டா, உலகின் முதல்நிலை வீரரான
ஜோகோவிச்சை 6-4. 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.

சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரர் ராபர்டோ படிஸ்டாவும் மோதினர். இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய படிஸ்டா, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். போட்டியில் தோற்றதால் அதிர்ச்சியடைந்த ஜோகோவிச், டென்னிஸ் பேட்டை உடைத்ததுடன், தனது மேலாடையையும் கிழித்தார். 12 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தரநிலையில் 19ஆவது இடத்திலிருக்கும் படிஸ்டாவிடம் தோற்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் ஆறுமுறை நேருக்குநேர் மோதியுள்ளனர்.மற்றொரு அரையிறுதிப் போட்டி உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆண்டி முர்ரே மற்றும் ஜைல்ஸ் சிமோன் இடையே நடக்கிறது. இந்த போட்டியில் வெல்பவருடன் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் படிஸ்டா மோதுவார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close